பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீநிலைகளை ஒட்டியுள்ள அனைத்துப்பகுதிளிலும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார; நிலையில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன.
இன்றைய நிலவரப்படி வடக்கலூர் ஏரி, வெண்பாவூர் ஏரி மற்றும் அரும்பாவூர் பெரிய ஏரி ஆகியவை 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
லாடபுரம் பெரிய ஏரி, குரும்பலூர்; ஏரி ஆகியன 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. வெங்கலம் சிறிய ஏரி, பாண்டகபாடி ஏரி, ஆய்குடி ஏரி, பெரம்பலூர் சிறிய ஏரி, வடக்கலூர் அக்ரஹாரம் ஏரி, எளம்பலூர் ஏரி ஆகியன 50 சதவீதத்திற்கு மேல் கொள்ளளவை எட்டியுள்ளது.
அரும்பாவூர் சின்ன ஏரி, பூலாம்பாடி பொன்னேரி, பெரியம்மாபாளையம் ஏரி, பூலாம்பாடி சின்ன ஏரி, வெங்கனூர் ஏரி, தழுதாழை ஏரி, வெங்கலம் ஏரி, தொண்டமாந்துறை ஏரி, எசனை ஏரி, மாதவனை அம்மன் ஏரி, அன்னமங்கலம் ஏரி, அரசலூர் ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் பெரிய ஏரி, அகரம்சீகூர் ஏரி, கீரவாடி ஏரி, மேலப்புலியூர் ஏரி, லாடபுரம் சின்ன ஏரி, களரம்பட்டி ஏரி, செஞ்சேரி ஏரி, புதுநடுவலூர் ஏரி, அய்யலூர் ஏரி, வரகுபாடி ஏரி, காரை பெரிய ஏரி, காரை சின்ன ஏரி, தெரணி ஏரி, நாரணமங்கலம் ஏரி, பொம்மனப்பாடி ஏரி, சிறுவாச்சூர; ஏரி, செட்டிகுளம் ஏரி, டி.களத்தூர் பெரிய ஏரி, டி.களத்தூர் சின்ன ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி, அத்தியூர் ஏரி, பில்லாங்குளம் ஏரி, காரியனூர் ஏரி, நெய்குப்பை ஏரி, தொண்டப்பாடி ஏரி, சாத்தனவாடி ஏரி, திருவாளந்துறை ஏரி, செங்குணம் ஏரி, வி.களத்தூர் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரி, கீழப்புலியூர் ஏரி, கீரனூர்ஏரி, பென்னகோனம் ஏரி, திருமங்கலம் பெரிய ஏரி, கிழுமத்தூர் ஏரி, கிளியூர் ஏரி, பெருமத்தூர் ஏரி, கைபெரம்பலூர் ஏரி, ஆண்டிக்குரும்பலூர் ஏரி, பேரையூர் ஏரி, ஒகளுர; ஏரி, கைகளத்துhர; ஏரி, நூத்தப்பூர் ஏரி, நெற்குணம் ஏரி, கண்ணப்பாடி ஏரி மற்றும் தேனூர் ஏரி ஆகிய 62 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான நீர்வரத்து வந்துள்ளது.
நீர்வரத்துப்பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்தல், ஜே.சி.பி வாகனம், ஜெனரேட்டர் வசதி, டார்ச் மற்றும் லாந்தர் விளக்குகள் உள்ளிட்ட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப்பகுதிகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இரவும், பகலுமாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் முழுவீச்சில் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு ஆங்காங்கே ஏற்படும் சிறு பாதிப்புகளையும், தரைப்பாலங்கள் மற்றும் வாய்க்கால்களில் ஏற்படும் அடைப்புகளையும் உடனடியாக சரிசெய்து வருகின்றனர்.
தொடர்மழை காரணமாக பாதிப்பு ஏற்படும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் தமிழக அரசின் நிவாரண உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 2லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் வேட்டி-சேலை உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இடிந்த மற்றும் இடியும் நிலையில் உள்ள வீடுகளிலிருந்து பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாயக்கூடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப்பகுதிகளில் கொசு உறபத்தியாகாமல் தடுக்கவும், தொற்று ஏற்படாமல் தடுக்கவும் பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம ஊராட்சிகளில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர; தெரிவித்துள்ளார;.