தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விரைவில் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – வயல்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தகவல் தெரிவித்தார்.
தொடர் மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தொண்டப்பாடி, பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களை இன்று நேரில் பார்வையிட்டு, சம்மந்தப்பட்ட வயல்களின் விவசாயிகளிடம் ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 20,328 ஹெக்டேரில் மானாவாரியில் பருத்தியும், 51,250 ஹெக்டேரில் மக்காச்சோளமும், நெல் 1,355 ஹெக்டேரும், வாழை 173 ஹெக்டேரும், பாக்கு 55 ஹெக்டேரும், கரும்பு 5,133 ஹெக்டேரும், மரவள்ளிக்கிழங்கு 1,729 ஹெக்டேரும், வெங்காயம் 4,430 ஹெக்டேரும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வயல்களில் நீர் தேங்கியதில் பாரா வாடல் நோய் மற்றும் வேரழுகள் நோயால் பருத்தியும், காற்றின் காரணமா மக்காச் சோளம், வாழை, பாக்கு போன்ற பயிர;களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தினர் விவசாயிகளின் வயல்களில் நேரடி ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். கணக்கெடுக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பயிர்களின் தகவல்கள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விரைவில் நிவராணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஆறுமுகம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் கவிமணி மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர், வேப்பந்தட்டை எஸ். சேகர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆலத்தூர் சி. அண்ணாதுரை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வருவாய்த்துறையினருடன் இணைந்து வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர்ர் வட்டார கிராமங்களில் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பருத்தியில் பாராவாடல் நோய் அதிக அளவு மண்ணில் ஈரம் இருப்பதாலும், வடிகால் வசதி இல்லாததாலும் நன்றாக வளர்ந்த பெரிய செடிகளிலும், காய்கள் பிடித்துள்ள செடிகளிலும் இந்நோய் அதிக அளவில் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த உடன் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் 100 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் கோபால்ட் குளோரைடு என்ற நுண்ணூட்டத்தினை கலந்து தெளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 1மூ பொட்டாசியம் நைட்ரேட் (Multi K) 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் கலந்து இலைவழியாக கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
வேரழுகல் நோய் தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் அதிக அளவு காணப்படும். பருத்தி பயிரில் வேருக்கு போதுமான அளவு பிராணவாயு கிடைக்காததால், சத்துக்களை மண்ணிலிருந்து எடுக்க முடியாமல் இந்நோய் தடுக்கிறது. இதற்கு காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50 சதவீதம் நனையும் பவுடர் (WP)- 3 கிராம்-லிட்டர் தண்ணீர் (அல்லது) கார்பன்டைசிம் 50% (WP) – 2 கிராம்ஃலிட்டர் தண்ணீர் (அல்லது) டிரைபிளோக்ஸிஸ்ரோபின் (Trifloxystrobin (25%) + டெபுகோனாசால் (Tebuconazole 50% (WP) – 0.5 கிராம்ஃலிட்டா; தண்ணீர் வீதம் இதில் ஏதேனும் ஒன்று கரைத்து வேர்ப் பகுதியில் நன்றாக நனையுமாறு ஊற்றவும்.
மேலும் வேப்பந்தட்டை மற்றும் பெரம்பலூர் வட்டாரங்களில் புரோடீனியா புழு மற்றும் தண்டுதுளைப்பான் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த குளோரன்டிரானில்பிரோல் (Chlorantranilprole) 18.5% Sc- 60 மில்லி-ஏக்கர் (அல்லது) தயோடிகார்ப் (Thiodicarp) 75% WP – 400- கிராம் / ஏக்கர் (அல்லது) இன்டாக்ஸிகார்ப் (Indoxicarp) 15% WP – 200 – மில்லி / ஏக்கH இதில் ஏதேனும் ஒரு மருந்தினை கைத்தெளிப்பான் கொண்டு இலைகள் நன்றாக நனையும்படி காலை (அல்லது) மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
மேற்கூறப்பட்டுள்ள முறையினை விவசாயிகள் கடைபிடித்து பருத்தியில் வரும் பாராவாடல், வேரழுகல் நோய் புரோடீனியா மற்றும் தண்டு துளைப்பான் பு+ச்சியிலிருந்து பயிரi காப்பற்றலாம் என்று தெரிவித்தார் .
இந்த ஆய்வின்போது பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் பாதுகாப்புத்துறை உதவிப்பேராசிரியர்கள் கல்பனா, பாரதிகுமார், வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.