பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மக்கள் வீடுகளுக்கு முடங்கினர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயப் பணிகள். அப்பளம் தயாரிப்பு, குடிசைத் தொழில்கள், சிறு வியபாரிகள், தரைக்கடை வியாபாரம் போன்றனவை மட்டுமில்லாமல், நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
கிராம புற மக்கள் நகரங்களுக்கு வேலை தேடி கொள்முதல் செய்ய வாராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் முக்கிய ஊர்களின் கடைவீதிகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.