பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அருகே உள்ள தொண்டப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை எல்.ஐ.சி கிளை மேலாளர் வீரமணி தொடங்கி வைத்தார்.
இதில் டாக்டர்பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு வகையான பொதுமருத்துவ சிகிச்சைகளை அளித்தனர். இதில் தொண்டப்பாடி மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
இம்முகாமில் எல்.ஐ.சி உதவி கிளை மேலாளர் கஜேந்திரன், வளர்ச்சி அதிகாரி மூர்த்தி, முகவர்கள் சுத்தாங்காத்து, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.