Strike to demand money from workers; 100 percent bus operation in Perambalur!

கடந்த 8 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட அவர்களுக்கு உரிய உழைப்பால் செலுத்தப்பட்ட தொகையை வழங்க கோரி, தொடர்ந்து போரடி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் பிடித்தம் செய்யபட்ட சுமார் பல கோடி ரூபாயை வழங்காமல் தமிழ்நாடு அரசு இழுத்தடிப்பு செய்து வருகிறது. பல ஊழியர்கள் பலர் அந்த தொகையை கண்ணில் பார்க்காமலேயே மாண்டு மண்ணிற்கு சென்று விட்ட நிலையில் இன்னும் இருப்பவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பல வீண் விரய செலவுகளை செய்யும் அரசாங்கம், தொழிலாளர்களிடம் பெறப்பட்ட திரும்பத் தர மனம் இல்லாமல் உள்ளது. இதனால் அவர்களுடைய தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்த நிலையில், தற்போதைய அரசாங்கம் தற்காலிக ஓட்டுனர்களை நியமனம் செய்து பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இன்று காலை இயக்கி வருகிறது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலும், தொழிலாளர்களின் முயற்சி சவாலாகி உள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் பஸ் டெப்போவில் இருந்து, அனைத்து வழித்தடங்களிலும், தடங்கலின்றி பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!