பெரம்பலூர்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் குல்ஃபாம்(40), அம்ஜத்கான்(25) ஆகிய இருவரும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை
பகுதியில் தற்காலிக தரைக்கடைகள் அமைத்து சில நாட்களாக குறைந்த விலையில் காலணிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
அப்போது அங்கு இரண்டு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காலணிகள் வாங்குவதுபோல் இருவரிடமும் பேச்சு கொடுத்து, விலை அதிகம் என
வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் குல்ஃபாமையும், அம்ஜத்கானையும் சரமாரியாக தாக்கினர்.
இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்த குல்ஃபாமும், அம்ஜத்கானுயும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிழேவிழுந்து கதறினர்.
இதனை கண்ட பொது மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்தவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இவர்களின் வருகையால் வியாபாரம் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் தாக்கினார்களா என்ற கோணத்திலும் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.