இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தமிழகத்தில் பல்வேறு பகுதகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கென கட்டுமான தொழில், மெக்கானிக் தொழில், உணவு தயாரிப்பு, மோட்டார் வாகன ஓட்டுனர் மற்றும் கம்யூட்டர் ஹார்டுவேர் உள்ளிட்ட 33 வகையான தொழில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட தொழில்கள் அந்தந்த தொழில்களுக்கு உரிய தொழில் நகரங்களிலும், மற்ற பெரும்பாலான பயிற்சிகள் மாவட்ட தலை நகரங்களிலும் நடத்தப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இப்பயிற்சிகள் மூலம் பயன்பெற விரும்பினால் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 72-ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகி தங்களுக்கு விருப்பமுள்ள தொழிலை தோ;வு செய்து பயிற்சி பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.