பெரம்பலூர் : பெரம்பலூர் நகரில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகர் பகுதிகளில் தீவிர தொழுநோய் ஒழிப்பு கண்டுபிடிப்பு முகாம் கடந்த 12ந்தேதி
முதல் வரும் 24ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் துணை இயக்குனர் மருத்துவ பணிகள்(
தொழுநோய்) ஆலோசனைப்படி பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் முன்னிலையில் பெரம்பலூர் நகரில் 19 மற்றும் 20ந்தேதிகளில் நகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவம் சாராத மேற்பார்வையாளர்கள், தந்தை ஹேன்ஸ் ரோவர் செவிலியர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கொண்ட குழு வீடு, வீடாக சென்று தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் பணியை செய்தனர்.
முன்னதாக முகமிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நலக்கல்வியாளர் நெடுஞ்செழியன் செய்திருந்தார். களப்பணியை மருத்துவம் சாரா
மேற்பார்வையாளர்கள் சம்பத்குமார், அறிவு, சந்திரசேகர், பவுல்சேவியர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியை ஆய்வு
செய்தனர்.
முகாமில் தொழுநோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முடிவில் இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் என்எம்எஸ் சம்பத் நன்றி கூறினார்.