வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரூபன் தங்களது பல்வேறு கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.1992-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி குறைந்தபட்ச மாத ஊதியர் 24ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை என்றார். தற்போது வரை மாதம் 6 ஆயிரம் வரைதான் சராசரியாக ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதுவும் குறித்த காலத்தில் ஊதியம் தருவதில்லை என்றும் தெரிவித்தார்.உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பணி இழந்த சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது இந்திய தவ்ஹீத் ஜமாத் திலைவர் எஸ்.எம்.பாக்கர், எஸ்டிபிஜ மாநில நிர்வாகி கறீம், இஸ்லாமிய அறக்கட்டளை நிர்வாகி சிக்கந்தர், சமூக ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பலர் பங்கேற்று தொழிலளார்களின் கோரிக்கைகள அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.