பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்து நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளார்கள் தங்கள் கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா, அலாரம், பாதுகாப்பு பெட்டகம் பொருத்துதல், இரவு நேர பாதுகாவலரை நியமித்தல் மற்றும் பணியில் உள்ள நபர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது குறித்து இன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், பெரம்பலூர், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளகள், அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடை, நகை அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.