தூத்துக்குடி : எட்டயபுரம் அருகே இன்று காலை பெண்ணிடம் 7பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி மனைவி ராஜம்மாள்(50). இவர் இன்று காலை ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர் கண் இமைக்கும் நேரத்தில் ராஜம்மாள் கழுத்தில் கிடந்த 7பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹெல்மெட் திருடர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.