பெரம்பலூர் மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அவசரக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த மாதங்களில் பொழிந்த பெருமழையால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான சென்னை கடலூர் பகுதிகளில் நடிகர் சூர்யா நேரில் பார்வையிட்டு அவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். மேலும், அனைத்து மாவட்ட , நகர ஒன்றியம், கிளை மன்றங்களை சேர்ந்தவர்கள் தங்காளால் ஆன உதவிகளை வழங்கிட உதவிட நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். உதவி வழங்குபவர்கள் வரும் ஜன.14 ம் தேதிக்குள் வழங்கி உதவிட கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.