பெரம்பலூர், செப். 25: பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் விலாசம் கேட்பது போல், 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை காவல் துறையினர் தீவிர தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள கிரீன்சிட்டி பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி சுலோச்சனா (50). இவர், இன்று காலை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எளம்பலூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து சுலோச்சனா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு நகையை பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!