தங்களை பழங்குடியின் பட்டியலில் சேர்ப்பது எப்போது என தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி விடுத்துள்ளது. இந்த அமைப்பின் நிறுவன தலைவர் காரை.சுப்பிரமணியன் சென்னை சேப்பாக்த்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, நரிக்குறவர் எனப்படும் குருவிக்காரன் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி கடந்த 52 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிஅமைச்சரவையில் தங்களது மக்களை பழங்குடியின பட்டியிலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் , அதனை இன்றுவரை சட்டவடிவமாக்காதது ஏன் என்றும் அவர் வினா எழுப்பினார். நரிக்குறவர் சமூக மக்களை மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தங்களது குழந்தைகளும் கல்வி அறிவு பெற்று அரசின் எந்த பணிகளிலும் இன்றுவரை அமரவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டனார். பல்வேறு இளைஞர்களை தாம் படிக்கவைத்தும் கூட அவர்களுக்கு இன்றுவரை அரசு பணி கிடைக்காததால் அவர்களை விரக்தியில ஆழ்ந்து விட்டதாகவும் ஆதங்கம் தெரிவித்தார் .எனவே வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலாவது தங்களை பழங்குடியின பட்டியிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். . தங்களது சமூகத்தினர் மிக நேர்மையாக நடந்துகொள்வதால் தான் இப்படி அரசுகளால ஒதுக்கப்படுகிறோமோ என எண்ணத்தோணுவதகாவும் யாரோ சிலர் செய்யும் குற்றங்களுக்கு ஒட்டுமொத்த நரிக்குறர்களையும் பொறுப்பு ஏற்க செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் ஊடகங்கள் நரிக்குறவர் கைது என செய்திகள் வெளியிடுவதை தவிர்த்து குற்றம் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் திரைப்படங்களிலும் தங்களது சமூகத்தவரை சில இயக்குனர்கள் கடுமையாக விமர்சனம் செய்து படங்களை எடுப்பது தங்களுக்கு பெரும் வருத்தஅத்தை அளிப்பதாகவும் இது போன்ற தங்களது சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு தங்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தர ஊடக நண்பர்கள் திரையுலகினர் படுபடவேண்டும் என்றும் காரை.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். இந்த போராட்த்தில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தாம் எப்போதும் நரிக்குறவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறினார். மாலையில் உண்ணா விரதத்தை இடதுசாரி தலைவர் நல்லக்கண்ணு முடித்து வைத்தார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!