நல்லிணக்க நாள் உறுதிமொழி – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஏற்றனர்.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் அனைத்து அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்த உறுதி மொழியில் அனைத்து அலுவலர்களும், நான் சாதி, இன, வட்டார மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் உளமார உறுதி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.