Namakkal Eastern District DMK Meeting tomorrow Panchayat Secretaries meeting
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை ஜன.5ம் தேதி (மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன்) தனது தலைமையில் நடைபெறுகிறது. நாமக்கல் பார்லி தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் ஆகியோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
கூட்டத்தில் பார்லிமென்ட் தேர்தல் சம்மந்தமாகவும், பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இன்று 5ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சத்திரம் வடக்கு, தெற்கு ஒன்றியம், 10.30 மணிக்கு வெண்ணந்தூர் ஒன்றியம், 11.30 மணிக்கு ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், 1.30 மணிக்கு சேந்தமங்கலம் ஒன்றியம், மாலை 4 மணிக்கு எருமப்பட்டி ஒன்றியம், 5 மணிக்கு நாமக்கல் ஒன்றியம் ஆகிய இடங்களில் ஊராட்சி நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.