1020 persons in two days for temporary teacher work in Namakkal district; Tomorrow will be hired
தற்காலிக ஆசிரியர் பணிக்காக நாமக்கல் மாவட்ட இரண்டு நாட்களில் 1020 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். நாளை முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோவை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 4723ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உஷா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் போரட்டத்தை வழி நடத்திய 72 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் ரிமாண்ட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட 57 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தற்காலிக ஆசிரியர்பணிக்கு 1020 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் கல்வித்துறை அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று வருகின்றனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிக ஆசிரியர்கள்பணியில் அமர்த்தப்படுவார்கள்.
அரசின் அழைப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகள் 420 பேர் ஏற்கனவே பணிக்கு திரும்பியுள்ளார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.