
Pongal Prize for Namakkal District Ration Cardholder: Collector Information
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை அதிகள் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு (ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டடி நீள கரும்பு) மற்றும் ரொக்கத் தொகை ரூ.1,000-ம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே நடைமுறையிலுள்ள அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ரேசன் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இன்று 7ம் தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் 5.30 மணிவரையிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1,000 ஆகியரை ஸ்மார்ட் ரேசன் கார்டு அடிப்படையில்தான் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு இல்லாத இனங்களில் குடும்ப உறுப்பினர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1,00 பெற்று பயன்பெறலாம். இத்திட்டத்தின் செயல்பாட்டில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை போன் நெ.04286 281116, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்போன் நெ. 94450 00232, தனி தாசில்தார் செல்போன் நெ. 94450 00233 அல்லது சம்மந்தப்பட்ட தாலுக்கா வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.