மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு மதுபானகடைகள் (டாஸ்மாக்) நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,
தமிழக அரசு மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும் நாளை கடைகளை முழு அடைப்பு நடத்தி போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு துண்டறிக்கை வழங்கபட்டது.
மதுவில்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள், வணிகர்கள், மகளிர், மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டினர்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக சார்பாக மாவட்ட செயலாளர் துரை காமராஜ் ,இ .காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் ,
விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஜெ.தங்கதுரை, சிபிஐ சார்பாக மாவட்ட கழக தலைவர் ஞானசேகரன், சிபிம் சார்பாக மாவட்ட தலைவர் செல்லத்துரை,
மதிமுக மாவட்ட கழக செயலாளர் துரைராஜ், திக ஆறுமுகம்,மகள் நீதி பேரவை தலைவர் தமிழ்செல்வன், மனித நேய மக்கள் கட்சி ரஷித்அகமது, பகுஜூன் சமாட்சிவாதி கட்சி காமராஜ் மற்றும் அனைத்து அரசியல் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்