பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே நிச்சயித்த பெண்ணிடம் பழகிவிட்டு , திருமணம் செய்ய மறுத்த இளைஞர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜூ மகள் சரிதாவுக்கும் (25), வேப்பந்தட்டை வட்டம், அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் சக்திவேலுக்கும் (28) திருமணம் செய்வதற்காக, கடந்த 9.6.2014 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டதாம்.
இதைத்தொடர்ந்து, சரிதாவை சக்திவேல் நெருங்கி பழகி உள்ளனர். இதையடுத்து, திருமணம் செய்ய வேண்டுமென சக்திவேலை வலியுறுத்தியதை தொடர்ந்து, அவர் மறுத்துவிட்டாராம். இதற்கு, அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரிதா இன்று அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த ஆய்வாளர் ரஞ்சனா, சக்திவேலின் பெற்றோர் மாசிலாமணி (48), வெண்ணிலா (40) ஆகியோரை கைது செய்தார்.
தலைமறைவான சக்திவேலை போலீஸார் தேடி வருகின்றனர்.