பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய அரசு, நீர்வள, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் மத்திய நிலத்தடி நீர்வாரியம், தென்கிழக்கு கடலோர மண்டலம் மற்றும் ராஜுவ்காந்தி தேதிய நிலத்தடி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மக்களின் பங்கேற்பின் மூலம்; நீர்தாங்கிகளின் மேலாண்மை என்ற தலைப்பிலான நிலத்தடி நீர்வள மேம்பாடு குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இரண்டு நாள் பயிற்சி ( 07.07.2015 மற்றும் 08.07.2015) இன்று துவங்கியது.
இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) செல்வி.ச.மீனாட்சி துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் மத்திய மாநில அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் அடங்கிய சுமார் 150 நபர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
சிதைவுற்ற பாறைகள், சரளைகற்கள், மணற்பாறைகள் ஆகியவைகள் தங்களுக்கிடையே வருகின்ற நீரை தேக்கி வைத்து, நீர்தாங்கிகளாக செயல்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம வாரியாக நீர்தாங்கிகளின் வரைபடங்களை மத்திய நிலத்தடி நீர் வாரியம் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து எவ்வாறு தயாரிக்க போகிறது என்பதையும், நீர்தாங்கிகளின் மேலாண்மையில் மக்களின் பங்கேற்பு குறித்தும், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள், செறிவூட்டு கிணறுகள் கொண்ட கசிவுநீர் குட்டைகள் ஆகிய மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை முறை செறிவூட்டல் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் அதிக நிலத்தடிநீர் எடுப்பால் ஏற்படும் தாக்கமான கிணறுகள், குழாய் கிணறுகள் மற்றும் துளை கிணறுகள் பொய்த்துபோதல் ,அதிக மின்சார செலவு, அதிக நீர் எடுப்பு சாதனங்களுக்கான செலவு ஆகியவற்றிலிருந்து விடுபட சொட்டுநீர் பாசனம், நீர் தெளிப்பான் பாசனம் ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும்.
மேலும் நீர் மறுசூழற்சி, நீர் மறுப்பயன்பாடு ஆகிய முறைகளை வீடு மற்றும் தொழில்துறையில் பயன்படுத்த வேண்டும்.
இது குறித்து இந்த பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ள அலுவலர்கள் தங்கள் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் எடுத்துக்கூறி நீர்மேலாண்மையின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சென்னை மத்திய நிலத்தடி நீர் வாரிய அலுவலக தலைமை அதிகாரி அ.சுப்புராஐ; அவர்கள் பேசியதாவது:
நிலத்தடி நீரானது பொதுமக்கள், விவசாயத்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளினாலும் பயன்படுத்தப்படுகிறது.
மழை தான் நிலத்தடி நீரின் முக்கிய ஆதாரம். தமிழகம் ஆண்டொன்றுக்கு 55 நாட்களுக்கு மட்டுமே மழை பெறுகின்றது.
ஆனால் 365 நாட்களின் எல்லா தரப்பினருக்கான நீரின் தேவையும் இந்த 55 நாட்களில் நடைபெறும் செரிவூட்டலிருந்து பூர்த்தி செய்கிறது.
தமிழகத்தின் மேற்பரப்பு நீர் கிட்டதட்ட முழுமையாக 79 நீர்தேக்கங்கள் மற்றும் 39,400 பெரிய மற்றும் நடுத்தர ஏரி, குளங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து நீர் ஆதாரங்கள் மூலம் பாசனம் பெறும் மொத்த நீர்ப்பாசன பரப்பு சுமார் 33,47,600 ஹெக்டேராகும்.
நிகர பாசன பரப்பு சுமார் 29,12,100 ஹெக்டேராகும். இதில் நிலத்தடி நீh;மூலம் சுமார் 16,31,700 ஹெக்டேர் பரப்பு பாசனம் பெறுகிறது. இது மொத்த தமிழக பாசன பரப்பில் 56 சதவிகிதம் ஆகும்.
தமிழகத்தில,; 2011 ஆம் ஆண்டு நிலத்தடி நீர் கணக்கீட்டின்படி, 374 பிர்க்காகளில் நிலத்தடிநீh எடுப்பு 100 சதவீதத்திற்கு அதிகமாகவும், 48 பிh;காகளில் நிலத்தடிநீh; எடுப்பு 90 க்கு மேல் 100 க்கு குறைவான சதவீதமும், 235 பிh;காகளில் நிலத்தடிநீh; எடுப்பு 70 க்கு மேல் 90 குறைவான சதவீதமும், 437 பிh;காகளில் நிலத்தடிநீh; எடுப்பு 70 க்கும் குறைவான சதவீதமும் உள்ளதாக கணக்கிடப்பட்டு முறையே “அதிக நீh; எடுப்பு“, “மிக கவலைக்குhpய”, “கவலைக்குhpய”, மற்றும் “பாதுகாப்பான” பிh;காகள் என வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் 35 பிh;காகளில் முழுவதும் உப்புநீh; உள்ளதாகவும் கணக்கீடப்படுள்ளது. தமிழகத்தின் சுமாh; 40 சதவீத பிh;காகள் மிக கவலைக்குhpய நிலையில் உள்ளன.
நிலத்தடி நீh; வளத்தை நல்ல முறையில் மேலாண்மை செய்வதற்காக நிலத்தடி நீh; அமைப்பை முழுமையாக புhpந்துகொள்வது அவசியமாகிறது. இனிவரும் காலங்களில் மக்கள் பங்கேற்பதன் மூலம் மக்களே நிலத்தடி நீh; அமைப்பை நிh;வகித்து முன்னேற்ற இயலும்.
இந்த பயிற்சி வகுப்பில் மத்திய நிலத்தடி நீர் வாhpய ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி திரு.பி.நடராஐன் அவா;கள் பேசுகையில் தொpவித்ததாவது,
பெரம்பலூh; மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும்(4), 2009 நிலத்தடி நீர்வள கணக்கீன்படி 100 சதவீதத்திற்கு மேலான நீர் எடுப்பை செய்துகொண்டிருக்கின்றனர். எனவே தான் இந்த பயிற்சி திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில்; பயிரிடப்படும் முக்கிய பயிர்களில் நெற்பயிரின் பங்கு 12 சதவீதமேயாகும். ஆனால் நிலத்தடிநீர் எடுப்போ அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அந்த வருடத்தின் உருப்பெருகின்ற நிலத்தடி நீரின் 100 சதவீத்தை மிஞ்சிவிட்டது.
மேலும் கோடைகாலத்தின்(மே) தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகபட்சமாக சில இடங்களில் நிலமட்டத்திலிருந்து 28மீ ஆழத்திற்கு கீழே சென்று விடுகிறது.
சுமார் 10மீட்டர் ஆழத்திற்கு கீழாக அதிகமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர் உள்ள மேட்டு நிலப்பகுதிகளில் காணப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களும், அரசு அலுவலர்களும், நீர்தாங்கிகளை மேலாண்மை செய்வதற்கு புரிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது இவ்வாறு தெரிவித்தார். துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.