பெரம்பலூர் : நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ சார்பில் மாவட்ட தலைவர் முகமதுரபீக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா, மாவட்ட துணைத்தலைவர் முகம்மதுரபீக், மாவட்ட செயலாளர்
சித்திக்பாஷா, மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, மாவட்ட செயலாளர் அப்துல்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மதுபாரூக், பெரம்பலூர் நகரத்தலைவர் அகம்மதுஇக்பால், நகர செயலாளர் சமீர்அலி ஆகியோர் உட்பட பலர் கலந்து
கொண்டு, மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதயத்துல்லா தலைமையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் வரவேற்றார். முடிவில் உறுப்பினர் அய்யூப்ஹஜ்ரத் நன்றி கூறினார்.