நீண்ட போராட்டத்திற்கு பின்பு காவிரி மேலாண்மை ஆணையமும் , ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனுக்கு பதில் அளித்த பேசிய அவர், ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இன்றைய கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரை பெறுவது தொடர்பாக வலியுறுத்துவோம் எனத் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் என்ன மாதிரியான கருத்துக்கள் பேசப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்த பின்பு அனைத்துகட்சி கூட்டம் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.