பெரம்பலூர் : பெரம்பலூரில் கோர்ட்டின் கதவை இழுத்து மூடி வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூரில் பொய் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர்கள் இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
பெரம்பலூர் எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும்,
பெரம்பலூர் வக்கீல் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோர்ட் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து கோர்ட் பணிகளும் துவங்கியது.
வக்கீல் சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பக்க கதவை இழுத்து மூடினர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் வக்கீல் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.