பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொன் விழா நடைபெற்றது.
விழாவிற்கு சங்க தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கி சன்மார்க்க கொடியேற்றினார். பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்க கவுரவத் தலைவர்வக்கீல் பிரசன்னம், மாவட்டத்தலைவர் வக்கீல் சுந்தரராஜன், செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் பேசினார்கள்.
விழாவில் ஞானதீபம் ஏற்றி வைத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. விழாவில் அவைத்தலைவர் கருப்பண்ணன், துணைத் தலைவர்கள் சின்னசாமி, அழகுவேல், செயலாளர் செல்வராஜ் மற்றும் சன்மார்க்க சங்க பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மேட்டுக்குப்பம் ராமலிங்க சுவாமிகள் தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் சிவப்பிரகாச சுவாமிகள் நிறைவுரையாற்றினார்.