சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள் அம்மா உணவகத்தின் கதவூ ஒன்றரை மணி அளவிலேயே பூட்டப்பட்டதை ஏமாற்றத்துடன் பார்க்கும் மக்கள்
பெரம்பலூர். தமிழகத்தில் நேற்று 201 அம்மா உணவங்களை தமிழக முதல் அமைச்சர் ஜெஜெயலலிதா திறந்து வைத்தார். அதில், பெரம்பலூரில் திறக்கப்பட்ட இரு கடைகளும் அடங்கும். புதிய பேருந்து நிலையத்தில் துவக்கப்ட்ட அம்மா உணவகத்தில் மதிய உணவாக சாம்பார் சாதம் ரூ: 5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் வழங்கப்படுகிறது.
முதல் நாளான இன்று பசிக்கு சாப்பிடுவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்த போது போதுமான உணவு இல்லததால் பசியுடன் வேறு கடைகளுக்கு சாப்பிட சென்றனர்.
இது குறித்து கடையில் உள்ளவர்களிடம் கேட்ட போது நாள் ஒன்றுக்கு 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால், அந்த அளவிற்கு மட்டுமே சாதங்கள் தயாரிக்கப்பட்டது, உணவகம் திறந்த கொஞ்சம் நேரத்திலேயே அனைத்து விற்று தீர்ந்து போனதால் பணியாளர்கள் மதியம் ஒன்னரை மணி அளவிலேயே அளவிலேயே ஷட்டரை இழுத்து மூடினர்.
ஏராளமானோர் 3 மணி வரை உணவகம் இருக்கும் என்ற அறிவிப்பை நம்பி வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வேறு கடைகளுக்கு பசியுடன் திரும்பினர்.
மேலும், சாப்பிட வரும் பொதுமக்களுக்காக சாதங்களின் அளவையும், டோக்கன் கவுண்டர் ஆகியவற்றையும் கூடுதலாக்க வேண்டும் என்பதோடு, டீ, காபி, பால் ஆகியவற்றையும் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.