20151104_2
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் மாற்றுத்திறனுடையோருக்கான உள்ளடங்;கிய கல்வி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 11 பகல்நேர பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. அதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் அம்மாபாளையம், எசனை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செட்டிக்குளம், கொளக்காநத்தம், வேப்பூர் ஒன்றியத்தில் குன்னம், வேப்பூர், கீழப்பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தழுதாழை, கை.களத்தூர், வாலிகண்டபுரம், வி.களத்தூர் ஆகிய 11 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இம்மையங்களில் பள்ளிச் செல்லா மாற்றுத் திறனாளி குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு இயன்முறை (பிஸியோ) மருத்துவ பயிற்சிகருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் வந்து செல்ல ஆட்டோ வசதி உள்ளது. மேலும் அவர்களுக்கு இரண்டு நேரம் பால், பிஸ்கட், தானியவகைகளுடன் மதிய உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த மையங்களில் 3 மாதத்தில் தலைநிற்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு ட்ரங்க் பேலன்ஸ் கிடைப்பதற்காக பிசியோ பந்து, உடல் முழுவதும் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கு மற்றும் மூச்சுப்பயிற்சி கொடுப்பதற்கு ட்ரம்போலைன், நிற்பதற்கு பயிற்சி கொடுப்பதற்கு ஸ்டாண்டிங் போர்டு, நடைபயிற்சி கொடுப்பதற்கு பேரலல் பார் கெண்டைக்கால் தசைப்பயிற்சி கொடுப்பதற்கு ஆங்கிள் எக்சஸைஸர் உட்காருவதற்கு பயிற்சி கொடுப்பதற்கு பீம்; பேக், குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கு ஹை பெட், சி.பி பெட், தொடு உணர்வு மற்றும் தசையை வழுபடுத்துவதற்கு ஸ்டிமுலேட்டர், வலியை குறைப்பதற்கு அல்ட்ரா சவுண்டு மற்றும் வாக்ஸ் பாத், கைகளை திருப்புவதற்கு தோள்பட்டை இயக்கத்தை அதிகப்படுத்துவதற்கு, கழுத்து கட்டுப்பாடு முன்னேற்றத்திற்காக, கைகளுக்கு சரியான பிடிப்பு கிடைப்பதற்கு தசைகளின் இயக்கத்தை வழுப்படுத்துவதற்கு ஆகிய பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் முறையாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த 11 மையங்களில் 2012 – 13 ஆம் ஆண்டில் மொத்தம் 286 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட தொடர் பயிற்சியினால் கிடைக்கப்பெற்ற முன்னேற்றத்தின் காரணமாக, 2013 – 14 ல் மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள தீவிர மனவளர்ச்சி குன்றிய 410 மாற்றுத்திறனாளி குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் 2014 – 15 மனவளர்ச்சி சாதரண மாணவர்களுடன் பயிலும் நிலையை எட்டிய 29 மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்போது அனைத்து மாணவ, மாணவியர்களுடன் கலந்து பயின்று வருகின்றனர். மேலும் 2014 – 15 ல் மீதமுள்ள 377 மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் மனவளர்ச்சி முன்னேற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 2015 – 16 ஆம் ஆண்டில் மனவளர்ச்சியில் சாதரண மாணவர்களுடன் பயிலும் நிலையை எட்டிய 11 மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்போது அனைத்து மாணவ, மாணவியர்களுடன் கலந்து பயின்று வருகின்றனர். மீதமுள்ள 366 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பகல்நேர பராமாpப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

பெரம்பலுhர; மாவட்டத்தில் இயங்கி வரும் 11 பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கும் மருத்துவர;களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர; டாக்டர;.தரேஸ் அஹமது.இ.ஆ.ப., அவர;கள் இன்று (4.11.2015) நேரில் சென்று பார;வையிட்டு அங்குள்ள குழந்தைகளின் நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், மேலும் சிறப்பான வகையில் சிகிச்சை வழங்க செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர;களுடன் ஆலோசனை நடத்தினார்.

மனநல மருத்துவர், பிசியோ மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், பகல்நேர பராமரிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நபர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், வாரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் பகல்நேர பாதுகாப்பு மையங்களுக்கு இந்தக் குழுவினர் வருகை தந்து அங்குள்ள அனைத்து குழந்தைகளையும் தனித்தனியே முழுமையாக பரிசோதனை செய்து, ஆரம்ப நிலையிலிருந்து தற்போது அந்தக்குழந்தைகள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்தும், முன்னேற்றம் தேவைப்படும் குழந்தைகளுக்கு எந்த வகையிலான தொடர் சிகிச்சை வழங்க வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை தயார் செய்து வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் தாங்களாகவே பல்வேறு வண்ணங்களில் உள்ள பல்வேறு வடிவ பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைப்பதையும். வண்ணங்களை தெரிந்து சரியாக உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரலல்பார் என்றழைக்கப்படும் சரியாக நடக்க இயலாத மூளை முடக்குவாதத்துடன் கூடிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடைபயிற்சி சாதனைத்தில் குழந்தைகள் பயிற்சி பெற்று நடந்து வருவதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலர் கணேசன், பகல் நேர பராமரிப்பு மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலதி, மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, குழந்தைகள் நல மருத்துவர்கள் சிவராமன், கமலக்கண்ணன், எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் மருத்துவர் அறிவழகன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!