பெரம்பலூர் வட்டம் எசனையில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இயன்முறை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அகமது இன்று (20.08.2015) நேரில் பார்வையிட்டார்.
இந்த மையத்தில் பயிற்சி பெறும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கௌதம்ராஜ் என்கிற மாணவரை உதவியின்றி நிற்கிறாரா மற்றும் பேரலல் பார் உதவியுடன் நடக்கிறாரா என்பதை ஆய்வு செய்தார். மேலும் தீவிர மனவளர்ச்சிக் குன்றிய நஸ்ரின் பானு என்கிற மாணவியின் தசை இறுக்கம் எவ்வாறு உள்ளது ஆராய்ந்தறிந்து, தொடர் முன்னேற்றம் குறித்து இயன்முறை மருத்துவருக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் மாற்றுத்திறனுடையோருக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் தலா ரூ.3 லட்சம் செலவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல்நேர பராமாரிப்பு மையங்கள் பெரம்பலூர் ஒன்றியத்தில் அம்மாபாளையம், எசனை ஆகிய இடங்களிலும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செட்டிக்குளம், கொளக்காநத்தம் ஆகிய இடங்களிலும், வேப்பூர் ஒன்றியத்தில் குன்னம், வேப்பூர், கீழப்பெரம்பலூர் ஆகிய இடங்களிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தழுதாழை, கை.களத்தூர், வாலிகண்டபுரம், வி.களத்தூர் ஆகிய 11 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேலும் புதிதாக 17.08.2015 முதல் பெரம்பலூர் ஒன்றியத்தில் பெரம்பலூர் (கிழக்கு) அரசுப் பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் பாடாலூர் மேல்நிலைப்பள்ளியிலும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இம்மையங்களில் பள்ளிச் செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு இயன்முறை (பிஸியோ) மருத்துவ பயிற்சிகருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் வந்து செல்ல ஆட்டோ வசதி உள்ளது. மேலும் அவர்களுக்கு இரண்டு நேரம் பால், பிஸ்கட், தானியவகைகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த மையங்களில் 3 மாதத்தில் தலைநிற்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு ட்ரங்க் பேலன்ஸ் கிடைப்பதற்காக பிசியோ பந்து, உடல் முழுவதும் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கு மற்றும் மூச்சுப்பயிற்சி கொடுப்பதற்கு ட்ரம் போலைன் நிற்பதற்கு பயிற்சி கொடுப்பதற்கு ஸ்டாண்டிங் போர்டு, நடைபயிற்சி கொடுப்பதற்கு பேரலல் பார், கெண்டைக்கால் தசைப் பயிற்சி கொடுப்பதற்கு ஆங்கிள் எக்சஸைஸர், உட்காருவதற்கு பயிற்சி கொடுப்பதற்கு பீம்; பேக், குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கு ஹை பெட், சி.பி பெட், தொடு உணர்வு மற்றும் தசையை வழுபடுத்துவதற்கு ஸ்டிமுலேட்டர், வலியை குறைப்பதற்கு அல்ட்ரா சவுண்டு மற்றும் வாக்ஸ் பாத், கைகளை திருப்புவதற்கு தோள்பட்டை இயக்கத்தை அதிகப்படுத்துவதற்கு கழுத்து கட்டுப்பாடு முன்னேற்றத்திற்காக கைகளுக்கு சரியான பிடிப்பு கிடைப்பதற்கு தசைகளின் இயக்கத்தை வழுப்படுத்துவதற்கு ஆகிய பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டு நிபுணர்கள் மூலம் குழந்தைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த 11 மையங்களில் 2012-13 ஆம் ஆண்டில் மொத்தம் 286 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற முன்னேற்றத்தின் காரணமாக, 2013-14 ல் மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள தீவிர மனவளர்ச்சி குன்றிய 410 மாற்றுத்திறனாளி குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 2014-15 மனவளர்ச்சி சாதரண மாணவர்களுடன் பயிலும் நிலையை எட்டிய 29 மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்போது அனைத்து மாணவ, மாணவியர்களுடன் கலந்து பயின்று வருகின்றனர். மேலும் 2014-15 ல் 377 மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் மனவளர்ச்சி முன்னேற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது 2015-16 ஆம் ஆண்டில் மனவளர்ச்சி சாதரண மாணவர்களுடன் பயிலும் நிலையை எட்டிய 14 மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்போது அனைத்து மாணவ, மாணவியர்களுடன் கலந்து பயின்று வருகின்றனர். தற்போது 368 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பகல்நேர பராமாரிப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் தாங்களாகவே பல்வேறு வண்ணங்களில் உள்ள பல்வேறு வடிவ பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைப்பதையும். வண்ணங்களை தொpந்து சரியாக உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளதையும் பார்வையிட்டார்.
பேரலல் பார் என்றழைக்கப்படும் சரியாக நடக்க இயலாத மூளை முடக்குவாதத்துடன் கூடிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடைபயிற்சி சாதனைத்தில் குழந்தைகள் பயிற்சி பெற்று நடந்து வருவதை பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அங்குள்ள பயிற்சியாளர்களிடம், தன்னார்வத்துடன் இந்த குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களையும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக மாற்றும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.