பெரம்பலூர் : அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணியிடம் நேற்று மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கிய மாநில அளவிலான அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சியில் பங்கேற்ற அமைச்சரிடம், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் பணஇபுரிந்து வருகிறோம். 2012 மார்ச் முதல் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களின் பன்முக திறனையும், பள்ளியின் தரத்தையும் உயர்த்தி உள்ளோம். மேலும், தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் ஆதரவு அளித்து வருகிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில், ரூ. 7 ஆயிரம் ஊதியம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெறுகவும், எங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.