கலிமுத்திடுச்சு கலிகாலம் என்பார்களே அது இதுதான் போலும்,
கரூரில் சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் குடி போதையில் கிடந்த மாணவனை மீட்டு பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதே போல் திருவண்ணாமலை, மதுரை போன்ற நகரங்களில் மதுவை கட்டாயப்படுத்தி குழந்தைகளை குடித்த வன் கொடுமைபுறம், மாணவிகள் கர்ப்பமாவது ஒரு புறம் என சீரழிவுகள் நாள்தோறும் புதிது புதிதாக நடந்து கொண்டே வருகிறது.
மது என்னும் மாய அரக்கனை ஒழிக்க வேண்டும் 1993 ல் 9 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அதனை கண்டு கொள்ளவில்லை.
இன்று, மது எனும் மாயஅரக்கன் இன்று பல ஆயிரம் மக்களின் வாழ்க்கையை பாழாக்கி , அத்தியாவச தேவைகளையும் நிர்மூலமாக்கி வருகிறது என்பதற்கு இப்போது நடப்பவைகள் எல்லாம், ஒரு சில உதாரணங்களே,
ஒரு வீட்டில் ஆண் குடித்தால் பாதி வீடு எரிந்ததாக பொருள், அதே பெண் குடித்தால் முழு வீடும் எரிந்ததாக பொருள். கலாச்சாரம் என்ற பெயரில் கலர் சாராயம் குடிக்கும் சமூகம் பெரிய அவலக் கேடு.
ஒரு வீட்டைக் கெடுக்க ஒன்றும் செய்யத் தேவையில்லை, தலைமகனை குடிக்க வைத்தால் போதும் அந்த குடியே அழிந்து விடும் என்பது மூத்தோர்கள் சொல்…. அது இப்போது நிஜமாகி வருகிறது……
இன்று கோவையில் மாணவி மதுவின் மயக்கத்தில் மயங்கி கிடந்தார் என்ற செய்தி..
எங்கே போகிறது சமூகம்….. சிந்திக்க வேண்டும் …இன்று யாரோ பெற்ற பிள்ளைதானே என நினைக்க வேண்டாம்…. பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக இருக்கும் வரை நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும்..
தமிழகத்தில் தற்போது குடி குடியை கெடுக்க துவங்கிவிட்டது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்! —