பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேர்மையாக பணியாற்ற முடியாததால் மனமுடைநத அங்கன்வாடி பணியாளர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் நத்த்ககாடு கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் இளையராஜா மனைவி சுதா (35), இவர் பெரம்பலூர் மாவட்டம் நத்தக்காடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் இதே மையத்தில் உதவி சமையலராக பணியாற்றும் நத்தக்காடு கிராமத்தை சேர்ந்த தேவராஜன் மனைவி மருதம்பாள் (55), என்பவருக்கும் பணிக்கான காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. சுதா நேர்மையாக பணியாற்ற வேண்டும் என விரும்பி உள்ளார்.
ஆனால், மருதாம்பாள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மருதாம்பாள் சத்துணவு கூடத்திற்கும், பொருட்கள் வைப்பறைக்கும், கூடுதலாக பூட்டு போட்டுள்ளார். இது குறித்து சுதா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மருதம்பாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுதா இன்று மதியம் வீட்டிற்கு சென்று அரளி விதை விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இத்தகவலறிந்த இவரது உறவினர்கள் சுதாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது :
பணியாளர், உதவி சமையலர் இடையே கடுமையான மோதல் இருந்து வந்துள்ளது குறித்து எனக்கு புகார் வந்தது. இது குறித்து கடந்த 17ம் தேதி நான் நேரில் சென்று விசாரித்தேன்.
இருவரையும் பணியிடம் மாற்றம் செய்வதற்கான ஆணை தயாரிக்கப்பட்டு கலெக்டர் கையெழுத்துக்கு அனுப்பியுள்ளேன்.
விசாரணையின்போது சுதா வீட்டிலும் பிரச்சனை, இங்கும் பிரச்சனை என்று அழுதார். இத்தகவல் கிடைத்து மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன் என்றார்.
தற்கொலைக்கு முயன்ற சுதா, தான் விஷம் அருந்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆறு பக்கம் கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.