பெரம்பலூர் : பா.ம.க.வின் பசுமைத் தாயகம் சார்பில் குப்பை இல்லா தமிழகம் திட்டத்தை முன் மாதிரியாக மாற்றக் கோரி குப்பைகளை சேகரித்து குப்பை பெரம்பலூரில் துவக்கினர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பா.ம.க.வின் பசுமைத்தாயகம் சார்பில் குப்பை இல்லாத தமிழகம் என்ற திட்டத்தை மாநில துணைச் செயலாளர் க.வைத்தி தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், முன்னிலை வகித்தார்.
குப்பைகளால் ஏற்படும், தீமைகள் குறித்தும், பாலித்தீன் கேரி பேக்குகளால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பா.ம.க.வினர் குப்பைகளை கூட்டி அள்ளி குப்கைத் தொட்டியில் போட்டனர்.
கேரளாவில் கோவளம் நகராட்சியும், குஜராத்தில் அகமதாபாத் நகராட்சியிலும், பூஜ்ய குப்பைத் திட்டத்தை செயல்டுத்துகின்றன.
இதே போன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் நாடுகளில் பல நகரங்களில் பூஜ்ய குப்பை முறை உள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிகோ, இத்தாலியின் கப்பனோரி உள்ளிட்ட பல நகரங்களிலும், பூஜ்ய குப்பைத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் நம் நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி குப்பைகளை கூட்டி மறுசுழற்சி முறைக்கு ஆய்வு செய்திட முன்மாதிரியாக இன்று ஒரு நாள் அடையாளமாக செயல்படுத்தினர்.
மாநில துணைத் தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அழகு நீலமேகம், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் தங்கதுரை, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பிரபு, பெரம்பலூர் நகர செயலாளர் தேவேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.