பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பச்சைமலைப் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடியில் பச்சமலை செம்மலை ஆகியவற்றை இணைத்து விசுவகுடி அணை கட்டப்பட்டது. 33 அடி உயரம் கொண்ட இந்த அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் 23 அடி நீர் தேங்கியது. இந்நிலையில் இரவு நேரத்தில் பச்சைமலை பகுதியில் கனமழை பெய்தது.
கனமழையால் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விசுவக்குடி அணைக் கட்டிற்கு 750கனஅடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வெங்கலம் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புதியஅணைக்கட்டு என்பதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள், அணைக்கட்டு பகுதியில் இரவு முழுக்க காத்திருந்து, தண்ணீர் வரத்தையறிந்து, அதேயளவு தண் ணீரை வெளியேற்றுகின்றனர். கல்லாற்று வெள்ளப் பெருக்கால் கரையோர வயல்களில் நீர்புகுந்து நெல், மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் நீர் தேங்கியுள்ளது.