பெரம்பலூர்: லப்பைக்குடிக்காடு அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சந்திரா(30). இவர் அதே ஊரில் இயங்கி வரும் அரசு வங்கியில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளையின் போது அருகில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென சந்திராவின் அருகில் சென்று அவர் கழுத்திலிருந்த
3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பினார்.
இதில், நிலை தடுமாறிய சந்திரா கிழே விழுந்து திருடன், திருடன் சத்தம் போட்டார். அப்பகுதி பொது மக்கள் பைக்கில் சென்ற மர்ம நபரை தேடி பார்த்துள்ளனர். கிடைக்வில்லை. இதுகுறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் சந்திரா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் சாலையோரம் நடந்து சென்ற பெண்னிடம் நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.