பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலைபகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்செல்வம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு டூவீலர் மறித்து சோதனையிட்டதில் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த மருமுத்து மகன் ரமேஷ் என்பவர் 2 லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாயை உரிய ஆவனங்கள் இன்றி பிம்பலூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி கொண்டுசெல்ல முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர். பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் பேபி மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.