மாவட்ட முதன்மை கல்வி அலுவகத்தில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
நடைபெற்று முடிந்த செப்டம்பர்- அக்டோபர் 2015 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 11.12.2015 (வௌளிக் கிழமை) வரை தாங்கள் தேர்வெழுதிய அந்தந்த மையங்களில் பெற்றுக் கொள்ள ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது கனமழை பெய்ததன் காரணமாக சில மாவட்டங்களில் தனித்தேர்வர்கள் இதுநாள் வரை தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாதது தெரிய வருவதால், மாணவர்கள் நலன் கருதி தனித்தேர்வர்கள் வரும் 18.12.2015 (வெள்ளிக் கிழமை) வரை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் (ஞாயிறு நீங்கலாக) அலுவலக நேரத்தில், பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. 18.12.2015க்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.