பெரம்பலூர்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.25 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.
செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.25 விழுக்காடு தோ;;ச்சி பெற்று மாநில அளவில் 5 வது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 92.33 விழுக்காடு பெற்று மாநில அளவில் 17 இடத்தை பெற்றிருந்தது. மாவட்ட அளவில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 95.44 விழுக்காடு தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 5,219 மாணவர்களும், 4,495 மாணவிகளும் என மொத்தம் 9,714 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,027 மாணவர்களும், 4,420 மாணவிகளும் என மொத்தம் 9,447 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
சென்ற ஆண்டு 92.33 விழுக்காடாக இருந்த தோ;ச்சி விகிதம் இந்த ஆண்டு 97.25 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள் அளவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சுபத்திரா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்ததையும்,
அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். திவ்யப்பிரியா, லப்பைக்குடிகாடு அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ரிஸ்வானாபானு ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டமிடத்தையும்,
வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நிவேதா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ்அஹமது— கூட்ட அரங்கில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனா;.
ஆட்சியர் ஆசிரியர்களுக்கு பாராட்டு:
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ் அஹமது பேசியதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றிப்பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவ, மாணவிகள் அனைவரையும் மனதாரபாராட்டுகிறேன்.
குறிப்பாக அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் 95.44 விழுக்காடு தேர்ச்சிப்பெற்றிப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இதற்கு முழுமுதற்காரணமாக விளங்கும் அரசுப்பள்ளிகளின் முதன்மை கல்வி அலுவலரையும், தலைமை ஆசிரியர்களையும் ஆசிரியப் பெருமக்களையும், கல்வித்துறை அலுவலர்களையும் மனதாரப்பாராட்டுகின்றேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராசு, தொடக்க கல்வி அலுவலர் பாலு, மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.