பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில் நாடு எந்தவித வளர்ச்சியையும் எட்டவில்லை எனக் கூறி காங்கிரஸ் கட்சி மகளிர் அணி சார்பில் டெல்லியில் கண்டன போராட்டம் நடைபெற்றது.இன்றுடன் பாஜக ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 ஆண்டுக்கால சாதனை விளக்க நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருப்பகுதியாக தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.