பெரம்பலூர் : பரிவார் டெய்ரீஸ் பிடிஏ பவுண்டேசன் களப்பணியாளர்கள் மற்றும் வைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் சிறுசேமிப்பு என்ற பெயரில் 45 லட்சம் குடும்பங்களிடம் 1000 கோடி ரூபாயை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி நீதிமன்றம் தடை விதித்தது. எனவே பரிவார் பிடிஏ நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வரும் அந்நிறுவன அதிகாரி தெய்வேந்திரனை கைது செய்ய வேண்டும் சம்மந்தப்பட்ட மோசடி நிறுனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி பரிவார் டெய்ரிஸ் சங்க செயலாளர் எ.பெலிக்ஸ்தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை மீத்தேன் எரிவாய்வு எதிர்ப்புக் குழு தலைவர் இரா.லெனின் ஆகியோர் கண்டன சிறப்புரை ஆற்றினர்.
பல்வேறு தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.