பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் SPT., இராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள டைஃபி கூட்ட அரங்கில் நாளை காலை 10 மணிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 8 வது மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.
எனது தலைமையில் நடைபெறும், இம்மநாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி அமைக்கக் கோரியும், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தொழிற்சாலைகள் துவங்கி இம்மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திடக் கோரியும், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை அரசு இது நிறைவேற்றததால் மீண்டும் நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தியும்,
டெங்கு காய்ச்சலால் இறந்த நாரணமங்கமலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சதீஸகுமாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் கோரிக்கை முன்வைத்து நடைபெறுகிறது.
பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றிய தலைவர் க.முத்தையா வரவேற்பு நிகழ்த்துகிறார். மாவட்டக்குழு தோழர் என்.ராமு கொடியேற்றி வைக்க உள்ளார். DYFI மாவட்டக்குழு தோழர்கள் சி.பாரதி, பி.கஜேந்திரன், என்.சுரேஷ்குமார். பி.ராஜா, எஸ்.செல்வகுமார், எஸ்.இராமக்கிருஷ்ணன், எஸ்.வேல்முருகன், முன்னிலை வகிக்கின்றனர்.
மக்களுக்கான மருத்துவ சங்க மாநில செயலாளர் மருத்துவர் சி.கருணாகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் என்.செல்லதுரை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.கருணாநிதி, மாவட்ட செயலாளர் அழகர்சாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.கலையரசி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், ஆட்டோ சங்க மாநிலக்குழு சி.சண்முகம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணசாமி, ஆகியோர் வாழத்துரை வழங்கிறார்கள்.
DYFI மாநில துணைத் தலைவர் பி.குணசுந்தரி, DYFI மாநில துணைச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், DYFI மாவட்ட செயலாளர் டி.அறிவழகன், DYFI மாவட்ட பொருளாளர் டி.சீனிவாசன், சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
பெரம்பலூர், ஆலத்தூர் DYFI ஒன்றிய செயலாளர் என்.சோமு நன்றி உரையாற்றுகிறர்.
மாவட்ட மாநாட்டிற்கு பிற ஆதரவு கட்சியினர், தோழர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.