மின் வாரியத்தில் பணியாற்றும் 80 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டு முதல் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி கொடுத்து பல மாதங்களாகியும் வழங்காததை கண்டித்தும்,
களப்பணியாளர்களின் பதவி உயர்வில் வாரியம் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று பதவி உயர்வு வழங்க வலியுறுத்தியும், 8 வருட அனுபவம் உள்ள களப்பணியாளர்களை மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டியும், பல்வேறு லஞ்ச லாவண்ய புகாருக்குட்பட்ட பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளரை நியாயமான பொது விசாரணை செய்து இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட தலைவா; ஆர்.இராஜகுமாரன் தலைமை வகித்தார். கோட்ட துணைத் தலைவர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் குமாரசாமி, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் கே.கண்ணன், கோட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் எம்.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, பொருளாளர் பி.முத்துசாமி, எ.கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர், சதீஸ்குமார் நன்றி கூறினார்.