பெரம்பலூர்: நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு 1.1.2014 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் சங்கப்பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூரில் சங்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து மாவட்ட தலைவர் வி.கணேசன் தலைமையில் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட செயலாளர் சி.பிரபாகரன், பொருளாளர் கே.ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர்கள் எஸ்.கோவிந்தசாமி, வி.அன்பழகன், இணைச்செயலாளர்ள் டி.சம்பத், ஜி.முத்துவேல் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் அங்காடி விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் 2.11.2015 ஆம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மண்டல இணைப்பதிவாளா; அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கால வரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என தெரிவித்தனர்.