பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூரை சேர்ந்தவர் சின்னதுரை மகன் ஆகாஷ் (12 ). இவர் அருகே உள்ள வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் மாணவன் ஆகாஷ் பள்ளிக்கு சென்று வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் லைட் சுவிட்ச் போட முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் மயக்கமடைந்தார்.
உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் சங்கர் மற்றும் ஆசிரியர்கள் மாணவன் ஆகாஷை மீட்டு வி.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையளிக்கு பிறகு மயக்கம் தெளிந்தார். அங்கு வந்த ஆகாஷின் தந்தை சின்னதுரை உடன் அவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.