பெரம்பலூர்: பள்ளி மாணாக்கர்களுக்கு ஆதார் அடையாள அட்டை புகைப்படும் எடுக்கும் முகாம் அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு அக்.6, முதல் புகைப்படும் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கென கூடுதலாக புகைப்பட கருவி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்முகாமில் பொதுமக்களும் பயன்பெறும் வகையில், மேற்கண்ட முகாமின் போது ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்காத நபர்களுக்கும், ஏற்கனவே புகைப்படம் எடுத்து அட்டை வரப்பெறாத நபர்களுக்கு மீண்டும் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுத்திராத நபர்கள் தங்கள் பகுதியில் உள்ள (அரசு மற்றும் தனியார்) பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மையத்தில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இச்சிறப்பு முகாம் நடைபெறும் நாள் விவரம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிராமத்தில் முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் நிரந்தர ஆதார் அடையாள அட்டை மையம் இயங்கி வருகின்றது. இந்த மையங்களிலும் பொதுமக்கள் தங்களது ஆதாரர் அடையாள அட்டை புகைப்படும் எடுத்துக் கொள்ளலாம். இப்பணி இரண்டு மாதத்திற்குள் முடிவடைய உள்ளதால், அனைவரும் மேற்காணும் மையங்களில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு ஆதார் அடையாள அட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.விக்னேஷ்வர் 99945-54434 மற்றும் பணி மேற்பார்வையாளர் 80125-43237 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.