பெரம்பலூர், மே 25: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியை காணவில்லை என, அவரது தாய் புகார் அளித்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி சாலை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் முருகன் மகள் மூகாம்பிகை (17). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி மாலை அவரது தோழி வீட்டுக்கு சென்ற மூகாம்பிகை வீட்டுக்கு வரவில்லை. இதையறிந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி (33) இன்று அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.