பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கலைச்செல்வி (17). பனிரெண்டாம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த கலைச்செல்வியை, அவரது தாய் கண்ணகி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கலைச்செல்வி அவரது வீட்டில் தூக்கிட்டு இன்று மாலை தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.