பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவரும், அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. ஆலத்தூர் ஒன்றிய செயலாளரும், வேளாண்மை பொறியில் கூட்டுறவு சங்கத் தலைவருமான என்.கே கர்ணன், ஒன்றிய குழுத் தலைவர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை அதிமுக மாவட்டச் செயலரும், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவருமான ஆர்.டி. ராமச்சந்திரன், சட்ட மன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.
பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:
பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் கொண்டாடும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் ரூ. 100 ரொக்கம் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் பன்னீர் செல்வம், ஒன்றிய அணி இளைஞரணி துணைச் செயலாளர் சிவராஜ், அடைக்கம்பட்டி குருசாமி, ஒன்றிய இளைஞரணி தலைவர் முத்துசாமி, பாடாலூர்கிளைக்கழக செயலாளர்கள் ஸ்ரீகாந்த், குமார், ராஜா, நாகராஜ், மாரியபிள்ளை, கனகராஜ், இளைஞர் பாசறை செயலாளர் விஜயபிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.