மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
2015-16-ம் கல்வியாண்டிற்கான முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப்பிரதமாரின் தொழிற் கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை www.desw.in என்ற மின் அஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து 20 நவம்பர் 2015-க்குள் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 72-ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர் – 621704 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இதே விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் மறு பதிவு செய்யவும் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வாய்ப்பினை முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார்.