மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள டாக்டர்.தரேஸ் அஹமது செய்திக்குறிப்பு:
2015-16-ம் கல்வியாண்டிற்கான முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப்பிரதமரின் தொழிற் கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை www.desw.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து 20 நவம்பர் 2015-க்குள் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 72-ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர் – 621704 என்ற முகவாரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இதே விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் மறு பதிவு செய்யவும் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது என்ற தகவலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது கேட்டுக் கொள்கிறார்.