Bharatiya Janata Party’s victory: BJP celebrates with Crackers in three places in Perambalur
நடந்து முடிந்துள்ள 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஏறத்தாழ 350-க்கும் மேற்பட்டஇடங்களுக்கு மேல் வெற்றிபெற்றும், இதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெற்று 2-வது முறையாக அறுதிபெரும்பான்மையுடன் மத்தியில் 2-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் அமோக வெற்றிக்கு வரவேற்பு தெரிவித்து பெரம்பலூரில் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் வெடிவைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிறகு அங்கிருந்து கட்சித்தொண்டர்கள் கொடி ஏந்திஊர்வலமாக வந்து பழைய பேருந்துநிலையத்திற்கும், புதிய பேருந்துநிலையத்திற்கும் சென்றனர். அங்கு பட்டாசு வெடித்து கொண்டாடினர். நரேந்திரமோடியை 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த மாபெரும் வெற்றியை தந்துள்ள நாடுமுழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுமக்களுக்கு பா.ஜனதா கட்சியினர் இனிப்புகள் வழங்கினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுபிக்ஷா சாமிநாதன், அடைக்கலராஜ், மாவட்ட செயலாளர்கள் குரு.ராஜேஷ், அழகுவேல், முத்தமிழ்ச்செல்வன், நகர தலைவர் முருகேசன்ஆகியோர் கலந்துகொண்டனர்.